கர்த்தாவே உமது கூடாரத்தில்

தங்கி வாழ்பவன் யார்

குடியிருப்பவன் யார்  (2)

 

1.

உத்தமனாய் தினம் நடந்து

நீதியிலே நிலை நிற்ப்பவன்

மனதார சத்தியத்தையே

தினந்தோறும் பேசுவேனே – கர்த்தாவே

 

2.

நாவினால் புறங்கூறாமல்

தோழனுக்குத் தீங்கு செய்யாமல்

நிந்தையான பேச்சுக்களை

பேசாமல் இருப்பவனே- கர்த்தாவே

 

3.

கர்த்தருக்குப் பயந்தவரை

காலமெல்லாம் கனம் செய்பவன்

ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்

தவறாமல் இருப்பவனே – கர்த்தாவே

 

4.

கைகள் தூய்மை உள்ளவன்

இதய நேர்மை உள்ளவன்

இரட்சிப்பின் தேவனையே

எந்நாளும் தேடுபவனே – கர்த்தாவே



karththave umathu kudaraththil

dhangki vazpavan yar

kudiyirubpavan yar  (2)

 

1.

uthdhamanay thinam natanththu

nithiyile nilai nirbpavan

manathara chaththiyaththaiye

thinanththorum besuvene – karththave

 

2.

navinal burangkuramal

thozhanukkuth thingku seyyamal

ninththaiyana bessukkalai

besamal irubpavane- karththave

 

3.

karthdharukkub payanthdhavarai

kalamellam kanam seypavan

aanaiyiddu nasha்tam vanththalum

dhavaramal irubpavane – karththave

 

4.

kaikal thuymai ullavan

idhaya nermai ullavan

iradsibbin thevanaiye

enth nalum thedupavane – karththave